கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. கடலூர் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் பாலமாக செயல்பட்டு வரும் நிலையில், தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன ஓட்டிகள் பயணம் செய்தனர். இப்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை எழுந்த நிலையில், போலீசார் தடுப்புக்கட்டைகளை வைத்தனர். இதனையும் மீறி ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தரைப்பாலத்தில் துணிகளை துவைத்தும், செல்ஃபி எடுக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர்.