வாணியம்பாடியில் லாரி மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுனர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர்.
பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில், புதினா மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சர்வீஸ் ரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், லாரியின் ஓட்டுனர் கணேசனும், கிளீனர் கோவிந்தராஜனும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக பாரம் ஏற்றி வந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.