இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம்..வெளியான தகவல்..அதிர்ச்சியில் உறவினர்கள் - சீர்காழியில் பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி தென்பாதி மேட்டுத் தெருவை சேர்ந்த கனிவண்ணன், நேற்று முன்தினம் இரவு உப்பனாற்றங்கரையில் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய உடல், திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கொலைக் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி தென்பாதி அருகே 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.