மேடைக்கு லாக்கரை தூக்கி வந்த ராகுல் - உள்ளே இருந்து எடுத்த பேப்பர் தான் ட்விஸ்ட்

Update: 2024-11-18 14:19 GMT

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற உள்ள நிலையில், மும்பையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேர்தல் என்பது சித்தாந்த போர் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, பெரும் கோடீஸ்வரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான

போர் எனக் குறிப்பிட்டார். மும்பையில் உள்ள நிலங்கள் அனைத்தும் தங்களின் கைகளுக்கே செல்ல வேண்டும் என பெரும் கோடீஸ்வரர்கள் விரும்புவதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலங்கள், ஒரு பெரும் கோடீஸ்வரருக்கு தாரைவார்க்கப்பட உள்ளதாக குற்றம் சாட்டினார்.50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு அகற்றப்பட வேண்டும் என குறிப்பிட்ட ராகுல் காந்தி மத்திய அரசு அதில் தயக்கம்

காட்டி வருவதாக குறிப்பிட்டார். 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்ஸ் கான், ஏர்பஸ் உள்ளிட்ட மெகா திட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலத்திற்கு தாரைவார்க்கப்பட்டு விட்டதாக கூறிய ராகுல் காந்தி, இதன் மூலம் மகாராஷ்டிரா மாநில இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்