வந்தது கிரீன் சிக்னல்..தலையசைக்கும் மஸ்க்.?முடிவுக்கு வரும் பழைய பஞ்சாயத்து..!

Update: 2022-09-15 09:05 GMT

கருத்து சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க் என்பது ஊரறிந்த செய்தி... தனது பிசி ஷெடியூல்களுக்கு மத்தியில் தனது ஒற்றை ட்வீட்டால் அமெரிக்க அதிபர் பைடன் தொடங்கி

அவர் வம்பு இழுக்காதவர்களே கிடையாது என்று சொல்ல லாம்...! ஏன்.. ட்விட்டரை கூட தனது ட்விட்டால் விமர்த்து வந்தவர் தான் இந்த மஸ்க்..

இதனால் தான் கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்க போகிறார் என்றதும்.. கருத்துரிமைவாதிகளான பல நெட்டிசன்கள் குஷியாகினர்.

இந்திய மதிப்பு படி, சுமார் 3.36 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து ட்விட்டரை வாங்குவதாக மஸ்க் அறிவித்ததும்... ட்விட்டர் பங்குகளும் ஏற்றம் கண்டன..

ஆனால் திடீரென ஜூலை மாதம் ட்விட்டரை வாங்கும் தனது முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டு அதிர வைத்தார், மஸ்க்.

மஸ்க்கின் இந்த அறிவிப்பால் ட்விட்டர் பங்குகள் மீண்டும் சரிவை கண்டன. டுவிட்டரில் 20 சதவீத கணக்குகள் போலி எனவும், 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் தான்... தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

இதனால் அமெரிக்க நீதிமன்றத்தின் வாசலை தட்டியது ட்விட்டர் நிறுவனம்.. அக்டோபரில் இது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வர உள்ளது.

முன்னதாக மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்கிக் கொள்வதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். ஆனால் தற்போது ட்விட்டரின் பங்குகள் 41.8 டாலராக குறைந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், பங்கு தாரர்கள் அனைவரும் ட்விட்டரை மஸ்க் வாங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதனால் தற்போது மீண்டும் ட்விட்டரின் பங்குகள் ஏற்றம் காண தொடங்கி உள்ளன. இருப்பினும் மஸ்க் ட்விட்டர் விவகாரத்தில் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதால் நிறுவனத்தை வாங்குவாரா? மாட்டாரா ?என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்