அமெரிக்காவின் நியூயார்க், போஸ்டன் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கனமழையால், சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கின. இதனையடுத்து, வாகனங்களில் இருந்த பொதுமக்களை, கயிறு கட்டி மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே, திருமணம் நிச்சயமான இளம்பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.