ஒசூர் அருகே உள்ள லிங்கதரனப்பள்ளி கிராமத்தில், காட்டு யானைகள் புகுந்தன. அங்கு, தக்காளி, வெள்ளரிக்காய் பயிரிடப்பட்டிருந்த தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், செடிகளை மிதித்தும், பிடிங்கி எறிந்தும் சேதப்படுத்தின. மேலும், அருகில் இருந்த தோட்டத்திற்குள் 20க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மிதித்து நாசமாக்கின. பயிர்கள் சேதமடைந்து கிடந்ததை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளிச் செடியில் காய்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதமான தக்காளி, வெள்ளரி மற்றும் வாழையில் மதிப்பு பத்து லட்சம் ரூபாய் ருக்கும் என கூறப்படுகிறது. காட்டுயானைகளால் சேதமான பயிர்களுக்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.