கொட்டும் மழையிலும் நனைந்தபடி ஐயப்பனை தரிசனம் செய்த பக்தர்கள் | Sabarimala

Update: 2022-11-17 06:14 GMT

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கான அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்றுமுதல் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்யம் அபிஷேகமும், கணபதி ஹோமமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று ஐயப்பனுக்கு, நெய் அபிஷேகம், கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளது . இன்று மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து புஷ்பாபிஷேகம் உள்ளிட்டவையும் செய்யப்படவுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், கொட்டும் மழையிலும் பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி, ஐயப்பனை தரிசனம் செய்தனர். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலையில் கனமழை பெய்தது. ஆனால், மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்