சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தீர்ப்பளித்த அடுத்த நொடி.. நீதிமன்றத்தை அலற விட்ட குற்றவாளி
கேரளாவில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், நீதிமன்ற அறையிலேயே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலப்புழா மாவட்டம் காயம்குளத்தை சேர்ந்த தேவராஜன், 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த விரைவு போக்சோ நீதிமன்றம், தேவராஜன் குற்றவாளி என தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டதும் தேவராஜன், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு, நீதிமன்ற அறையிலேயே தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரது முயற்சியை தடை செய்த போலீசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.