சென்னையில் இருந்து கிளம்பிய லட்சக்கணக்கான மக்கள் - ஆமை போல் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

Update: 2025-01-11 03:06 GMT

ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு தரப்பினருக்கு ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், பயணிகள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக, சென்னையில் இருந்து 5 ஆயிரத்து 736 சிறப்பு பேருந்துகள் உட்பட 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சொந்த வாகனங்களிலும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றதால், பல்லாவரம் - தாமரம் ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்