தலைவர்கள் எடுத்த முடிவு.. இந்தியாவில் முடிவுக்கு வருகிறதா `இந்தியா’ கூட்டணி?கலைப்பா?

Update: 2025-01-11 03:15 GMT

மத்தியில் பாஜக ஆட்சிக்கு எண்ட் போடுவோம் என தொடங்கிய இந்தியா கூட்டணி EXPIRY DATE-யை நெருங்கிவிட்டது என விமர்சிக்கப்படும் வேளையில், இந்தியா கூட்டணியில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு....

2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நாடு நகர்ந்த வேளையில்.... 2023 ஜூலையில் உருவானது இந்தியா கூட்டணி.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு எண்ட் போடுவோம் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, இடதுசாரிகள் என 24 கட்சிகள் இணைந்து உருவானது.

ஆரம்பம் முதலே கூட்டணியில் ஏகப்பட்ட குளறுபடிகள், சிக்கல்கள் இருந்தாலும்... ஒரு வழியாக நாடாளுமன்றத் தேர்தலை இணைந்து சந்தித்துவிட்டன.

தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியாவிட்டாலும், அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தடுத்துவிட்டது இந்தியா கூட்டணி.

இருப்பினும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சிகளுடன் ஒரு கூட்டமும் நடக்கவில்லை... எனவே கூட்டணி முடிந்துவிட்டதா? என்ற கேள்வியெல்லாம் எழுந்தது.

இந்த சூழலில் அரியானா தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் கைகோர்த்தது. ஆனால் வேலைக்காகவில்லை.. பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றியை வசமாக்கவில்லை.

இந்தியா கூட்டணிக்கு மம்தா தலைமையேற்க வேண்டும் என்ற பேச்சல்லாம் ஓடியது. இந்த வேளையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசோடு கூட்டணி கிடையாது என கறாராக கூறிய கெஜ்ரிவால் தனியாக ஆட தொடங்கிவிட்டார்.

மாநில தேர்தல்களில் பாஜகவை மாநில கட்சிகள் பிளாக் செய்தாலும், காங்கிரஸ் தடுமாறுவது அக்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் எங்க ஆதரவு ஆம் ஆத்மிக்குதான் என இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துவிட்டது. ஆக மொத்தத்தில் டெல்லியில் தனித்து விடப்பட்டுள்ளது காங்கிரஸ்.

அத்தோடு மட்டுமல்லாது, மக்களவை தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி என சொல்லிவிட்டார் காங்கிரசோடு நீண்ட கூட்டணி வரலாறு கொண்ட ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ்.

அப்படியென்றால் அதை கலைத்துவிடலாமே என காஷ்மீரில் இருந்து குரல் கொடுத்துள்ளார் உமர் அப்துல்லா.. ஆக மொத்தத்தில் இந்தியா கூட்டணி முடிக்கு வருகிறதா? என்ற கேள்வி மீண்டும் வலுப்பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி தரப்பிலும், இந்தியா கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காகதான்... மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு அல்ல என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்