பொள்ளாச்சி அருகே ஐயம்பாளையத்தில் தனியார் டவுன் பேருந்து மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோபாலபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிகொண்டு பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் வந்த ஓட்டுனர் நடராஜ் மற்றும் அருகில் இருந்த கிட்டுச்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணித்த 36 பேர் காயம் அடைந்த நிலையில், சம்பவ இடத்தில் திரண்ட ஏராளமான பொதுமக்கள், போலீசார் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.