விமான கட்டணத்தை மிஞ்சிய பஸ் கட்டணம்...கொதித்தெழுந்த ராமதாஸ் | RAMADAS | OMNIBUS | BUSFARE

Update: 2022-12-25 02:03 GMT

கட்டண கொள்ளையை தடுக்க ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல அதிகபட்சமாக 4 ஆயிரத்து 999 ரூபாய் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க அரசு சட்டப்பூர்வ ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்