கள்ளக்காதலுக்காக கணவனை தலையில் அடித்து கொன்ற கொடூரம்..பிளான் போட்டு தூக்கிய போலீஸ்

Update: 2023-06-18 02:52 GMT

திருவிடைமருதூர் அருகே கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்த பாரதியின் மனைவி திவ்யா. அதே பகுதியில் ஆர்.ஜே நகரைச் சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார், திவ்யாவின் காதலன் என கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக பாரதியை காணவில்லை என அவரது உறவினர் செல்வமணி பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். திவ்யா, அவரது காதலன் டேவிட் என்கிற சதீஷ்குமாருடன் சேர்ந்து, பாரதியின் தலையில் அடித்து கயிற்றால் நெரித்துக் கொன்றது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பாரதியின் உடலை மினி லோடு வேன் மூலம் கொண்டு சென்று, திருப்பனந்தாள் பட்டம்குறுக்கு ரோட்டின் மேல் உள்ள பாலத்தின் அருகே சதீஷ்குமார் புதைத்துள்ளார். இதையடுத்து, திவ்யாவையும், அவரது காதலன் சதீஷ்குமாரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்