லக்னோ வீரரை பாராட்டிய மும்பை முன்னாள் அணியின் பவுலர் | lucknow super giants | Mumbai Indians

Update: 2023-05-17 14:56 GMT

லக்னோ வேகப்பந்து வீச்சாளர் மோஷின் கான் எதிர்காலத்தில் சிறந்த பவுலராக உருவெடுப்பார் என மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா பாராட்டி உள்ளார். மும்பை உடனான நேற்றையப் போட்டியில் கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே வழங்கி லக்னோவின் வெற்றியில் மோஷின் கான் முக்கியப் பங்கு வகித்தார். இந்நிலையில், மோஷின் கானைப் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள மலிங்கா, அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்களே கடைசி ஓவர்களில் தவறு செய்வார்கள் என்றும், ஆனால் கடைசி ஓவர் அழுத்தத்தை மோஷின் அற்புதமாகக் கையாண்டார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்