Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-04-01 07:58 GMT
  • வைக்கம் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்க கேரளா சென்றார், முதலமைச்சர் ஸ்டாலின். கேரள முதல்வர் விடுத்த அழைப்பின் பேரில், விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
  • காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும். பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்.
  • பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் என்ற பெயர்ப் பலகையுடன் சட்டமன்றத்திற்கு வந்த அதிமுக எம்எல்ஏ. தலைமைச் செயலகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் வைக்கப்படுகிறது.
  • ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பண மோசடி வழக்கில், நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு. பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில், வெளிவந்த உண்மை.
  • தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 44,480 ரூபாய்க்கு விற்பனை.
Tags:    

மேலும் செய்திகள்