"வீட்டு வாடகை தர முடியவில்லை" - திடீரென குடியேறும் போராட்டம் நடத்திய மக்கள் -தஞ்சை அருகே பரபரப்பு
தஞ்சை நாஞ்சிக்கோட்டை அருகே பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியபட்டினம் வாரியை சுற்றியுள்ள 50 ஏக்கர் காலி மனையில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டு வாடகை தர முடியாத காரணத்தால் அங்கு குடியேறுவதாகவும், இதே இடத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் மக்களோடு பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் சக்திவேல், குறிப்பிட்ட இடம் புறம்போக்கு நிலமாக இருந்தால், அங்கு மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.