சோழனால் கட்டப்பட்ட புகழ்வாய்ந்த கோயிலுக்கு வந்த பெரும் சோதனை - வேதனையில் மன்றாடும் மக்கள்

Update: 2023-01-20 13:41 GMT

Full View

கருங்கற்களால் கட்டப்பட்ட கோயிலின் பிரமாண்ட மதில் சுவர் சரிந்து கிடக்கிறது. தேர் மண்டபம் தொடங்கி யாளிகள் தாங்கி நிற்கும் மாட மண்டபம், நந்தி மண்டபம் என அனைத்து மண்டபமும் எப்போது சரிந்துவிழுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.

தமிழர்களின் கட்டக்கலை, சிற்பக்கலை சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த கோயில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத வன்னியப்பர் திருக்கோயில்...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் பராந்தக சோழனால் பிரமாண்டமாக கட்டப்பட்டு, சடையவர்மன் குலசேகரபாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் போன்றோர்களால் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோயிலில் 150 வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததாகவும், 100 ஆண்டுகளுக்கு முன்பு மாசி மகத்தன்று திருவிழாக்கள் நடந்து, கோயிலில் தேர் ஓடியதாகவும் சொல்லப்படுகிறது.

கவனிப்பாரற்ற கோயிலில் சிவனடியார்கள் தொண்டால் பூஜைகள் நடப்பதாக கடந்த 2021 ஜூன் மாதம் தந்திடிவி செய்தி வெளியிட்டது. இதனையடுத்து ஜூலையில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் திருப்பணிகள் நடத்தப்படும் என உறுதியளித்ததுடன், செப்டம்பரில் இதற்காக 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது வரையில் அங்கு திருப்பணிக்கான எந்த பணியும் தொடங்கவில்லை எனக் கவலை தெரிவிக்கும் பக்தர்கள், அரசு கவனம் செலுத்த கோரிக்கை விடுக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்