தமிழ்நாட்டில் வேலூர், சென்னை, திருச்சி உட்பட 14 இடங்களில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து கொளுத்தியது.
அதிகபட்சமாக வேலூரில் 107 புள்ளி 54 டிகிரி ஃபாரன்ஹீட்டும், கரூர் பரமத்தியில் 106 புள்ளி 7 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது.
திருத்தணியில் 103 புள்ளி 28 டிகிரியும், திருப்பத்தூரில் 102 புள்ளி 56 டிகிரியும், திருச்சியில் 102 புள்ளி 38 டிகிரியும் வெயில் கொளுத்தியது.
மதுரை நகரம் மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் 102 புள்ளி 2 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், ஈரோட்டில் 101 புள்ளி 84 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் வெயில் பதிவாகியுள்ளது.
சேலத்தில் 101 புள்ளி 48 டிகிரியாகவும், பாளையங்கோட்டையில் 101 புள்ளி 3 டிகிரியாகவும், சென்னை மீனம்பாக்கத்தில் 101 புள்ளி 12 டிகிரியாகவும் வெயில் கொளுத்தியது.
இதே போன்று, நாகை, நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது.