தமிழ்நாடு தான் முதலிடம்..அதுவும் எதில் தெரியுமா ? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரபரப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிலுவையில் உள்ள கடன் குறித்த விபரங்களை தருமாறு, மாநிலங்களவை உறுப்பினர் நாம நாகேஸ்வரராவ் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களின் நிலுவையில் உள்ள கடன் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிலுவையில் உள்ள கடன் 7 லட்சத்து 53 ஆயிரத்து 860 கோடி ரூபாய் என்றும் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாவது இடத்திலும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.