உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட 4 பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையில் குழு அமைத்துள்ளதாக, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பேசிய தலைமை நீதிபதி, ஆங்கிலத்தில் உள்ள சட்டங்கள் 99 சதவீத மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், மக்கள் தாங்கள் பேசும் மொழியில் சட்டங்களை புரிந்து கொள்வது அவசியம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஹிந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.