அதிமுக-திமுகவினர் இடையே திடீர் மோதல்...விருத்தாசலத்தில் பரபரப்பு

Update: 2022-11-17 03:47 GMT

விருத்தாசலத்தில் மின் விளக்கு பிரச்சனை அதிமுக, திமுக இடையே மோதல் மற்றும் சாலை மறியல் என, பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட விருத்தாசலம் வழியாக சென்றார். அப்போது, பொன்னேரி புறவழிச் சாலையில் அதிமுகவினர் வரவேற்பு கொடுப்பதற்காக குவிந்த போது, மின் விளக்குகள் எரியவில்லை என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வரும் போதும் மின் விளக்குகள் எரியவில்லை என்றும், அதனை சரி செய்ய கூடாது என திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆத்திரமடைந்த அதிமுக- திமுக கட்சியினர் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு புறவழிச் சாலையில் மின் விளக்குகள் எரியாததை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்

விருத்தாச்சலம் சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் சேலம் செல்லும் புறவழிச் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்