கேரளாவில் இப்படி ஒரு வழிபாடா!... 15 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைத்த பெண்கள் | KERALA
கேரளாவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரையை எரித்த கண்ணகியின் அவதாரமாக, ஆற்றுகால் பகவதி அம்மனை பெண்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும், மாசி மாத பூரம் நட்சத்திரம் அன்று, இங்கு நடைபெறும் பொங்கல் வழிபாடு உலக புகழ் பெற்றது. தமிழகம், கேரளாவில் இருந்து லட்ச கணக்கான பெண்கள், பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபட்டனர்.