முதல்வர் அலுவலகம் முன்பு கல்வீசி தாக்குதல்.. உச்சகட்ட பதற்றம் | Meghalaya CM

Update: 2023-07-25 03:03 GMT

மேகாலாயாவில் முதலமைச்சரின் முகாம் அலுவலகம் முன்பு கல்வீசித் தாக்குதல் நடந்த‌தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலம் துராவில் உள்ள முகாம் அலுவலகத்தில் சிவில் அமைப்புகளுடன் முதலமைச்சர் கான்ராட் சங்மா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அலுவலகத்திற்கு வெளியே, காரா மலைப்பிரதேசத்தை சேர்ந்த சிவில் சொசைட்டி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென கற்களை வீசி போலீசார் மீது போராட்டக்கார‌ர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் 5 போலீசார் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என முதலமைச்சர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். கல்வீச்சில் ஈடுபட்டோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவியும், சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்