"உக்ரைன்- ரஷ்யா போரால் சிக்கல்"'அடுத்த 3வாரங்களுக்கு.." பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Srilanka

இலங்கையில் அடுத்த மூன்று வாரங்களுக்கு எரிவாயு- எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்பதால், பொது மக்கள் சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2022-06-08 02:57 GMT

இலங்கையில் அடுத்த மூன்று வாரங்களுக்கு எரிவாயு- எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்பதால், பொது மக்கள் சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரி விதிப்பு முறை இல்லாமல் இருந்ததாலேயே கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியதாக கூறியுள்ளார். அதே சமயம் உக்ரைன்-ரஷ்யா போரினால் அனைத்து நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி அடையும் என்றும் 2024ம் ஆண்டில் இது சரியாகும் என்றும் ரணில் விக்ரமசிங்கே கூறினார். ஒரு ஆண்டுக்கு இலங்கையில் 2.4 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது 1.6 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியே கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ளார். அரிசி போன்று மரக்கறிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், எனவே விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்றார். நாட்டுக்குத் தேவையான மருந்து, மருத்துவப் பொருட்களைக் கொண்டுவர சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் ரணில்விக்ரமசிங்கே குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு வருமானம் வந்தால் மட்டுமே நாட்டை ஸ்திரப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்