நாட்டை உலுக்கிய திடீர் பனிச்சரிவு.. 80 கார்கள்.. 350 சுற்றுலா பயணிகள் - 7 பேருக்கு நேர்ந்த கதி

Update: 2023-04-05 04:42 GMT

சிக்கிம் மாநிலத்தில், பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட குழந்தை உட்பட 7 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

  • சிக்கிம் மாநிலம் காங்டாக் - நாதுலா பாஸுடன் இணைக்கும், ஜவஹர்லால் நேரு சாலை, 15வது மைலில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
  • இதில் சுற்றுலாப் பயணிகள் பலர் சிக்கித்தவித்தனர். மீட்கப்பட்ட 14 பேரில் குழந்தை, பெண் உட்பட 7 பேர், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
  • மீதமுள்ள ஏழு பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கேங்டாக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • காங்டாக் - நாத்துலா சாலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 முதல் 6 வாகனங்களில் சுமார் 30 சுற்றுலாப் பயணிகள் சிக்கினர்.
  • இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் துரிதமாக மீட்பு பணியில் இறங்கினர்.
  • இதில், 22 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
  • பனியை அகற்றியதன் மூலம் 350 சுற்றுலா பயணிகள் மற்றும் 80 வாகனங்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்