"என்னை கடித்த பாம்பு இதுதான்" - கையோடு தூக்கி வந்த இளைஞர் | மருத்துவமனையில் பரபரப்பு
தேனி மாவட்டம் தேவாரம் அருகே, கட்டிட வேலை பார்த்த இளைஞரை கடித்த கட்டு விரியன் பாம்புடன், அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததார். தேவாரம் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில், விவேக் என்பவர் கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது, சுமார் 2 அடி கட்டுவிரியன் பாம்பு அவரது வலது கையை கடித்தது. உடனே அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடித்த நிலையில், அவர் அந்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததால், மருத்துவமனையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.