ராஜஸ்தானில் விளையாட்டுத்துறை அமைச்சர் அசோக் சந்த்னா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காலணி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஷ்கர் மேளா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் அசோக் சந்த்னா உரை நிகழ்த்த வந்தவுடன் மக்கள் காலணி மற்றும் பிற பொருட்களை வீசத் தொடங்கினர். நிகழ்ச்சியில் அசோக் சந்த்னாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவியது.