ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் மாதத்திற்கு 99 ரூபாயாக இருந்து 155 ரூபாயாக, அதிரடியாக 57 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒடிசா மற்றும் ஹரியானா மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட இந்த கட்டண உயர்வு, தற்போது, ஏழு இதர மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப நிலை அலைபேசி சேவை திட்டத்தில், ஒரு ஜி.பி. டேடா மற்றும் 300எஸ்.எம்.எஸ்கள் 28 நாட்களுக்கு அளிக்கப்படுகின்றன.
தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர்டெலின் கடன் சுமை 1.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது