செந்தில் பாலாஜி கைதும்.. அமைச்சர் PTR போட்ட ட்வீட்டும் - பரபரப்பான அரசியல் களம்

Update: 2023-06-15 03:02 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சட்ட பிரச்சினை, இந்தத் தருணத்தில் ஒரு அடக்குமுறையான சூழலை உருவாக்கியது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த போதிலும், விசாரணை என்ற பெயரில் 17 மணிநேரம் துன்புறுத்தி கைது செய்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். நேரில் சந்தித்து பேச முடியாத நிலையில், செந்தில் பாலாஜி குணமடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்