"நீதிமன்றத்துக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்" - ச.ம.க தலைவர் சரத்குமார்

Update: 2023-02-14 04:03 GMT
  • நீதிமன்றத்துக்கு வருவோரின் பாதுகாப்பை காவல் துறை உறுதிசெய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
  • கோவை நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் இடமான நீதிமன்றங்கள், அங்கு வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகுந்த அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இதுபோன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க, அச்சுறுத்தலான போக்குடன் காணப்படுபவர்களை முன்னரே கண்டறிந்து, அவர்கள் நீதிமன்றம் வரும்போது, உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்