ருத்ர தாண்டவமாடிய ருதுராஜ் கெய்க்வாட் - ஒரே ஓவரில் 7 சிக்சர் அடித்து சாதனை | ruturaj gaikwad

Update: 2022-11-28 09:56 GMT

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே ஓவரில் 7 சிக்சர் அடித்து மஹாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சாதனை படைத்து உள்ளார். உத்தரப்பிரதேசத்துடனான காலிறுதி ஆட்டத்தின் 49வது ஓவரில் இந்த சாதனையை கெக்ய்வாட் நிகழ்த்தினார். சிவா சிங் வீசிய அந்த ஓவரில், தொடர்ச்சியாக 4 சிக்சர்களை கெக்ய்வாட் அடித்தார். நோ-பாலாக வீசப்பட்ட 5வது பந்தையும் எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பிய கெக்ய்வாட், கடைசி 2 பந்துகளையும் சிக்சருக்குப் பறக்கவிட்டு சாதனை படைத்தார். இதன்மூலம், இரட்டைச் சதத்தையும் ருசித்த கெக்ய்வாட், 159 பந்தில் 10 ஃபோர், 16 சிக்சர்களுடன் 220 ரன்கள் குவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்