ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனை தளர்த்தப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, ஐந்து இடங்களில் நிபந்தனைக்கு உட்பட்டு பேரணிக்கு அனுமதி அளிக்க தயார் என்றும் கருத்துரிமை, பொது இடத்தில் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு பொதுநலன் கருதி நியாயமான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க முடியும் எனவும் வாதிட்டார். இதை எதிர்த்து வாதிட்ட ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர், பேரணிக்கு அனுமதி அளிக்க மறுப்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.