"ரூ.1500 டிக்கெட்டை 4000 ரூபாய்க்கு விக்குறாங்க" - குமுறும் CSK ரசிகர்கள்

Update: 2023-04-12 02:08 GMT

ஐபிஎல் டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

16 வது ஐ.பி.எல் திருவிழா சுவாரஸ்யத்துக்கு சிறிதும் பஞ்சம் இல்லாமல், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்குப்பட்டிருக்கும் நிலையில், மொத்தமுள்ள இருக்கைகளில் 40 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 60 சதவீத டிக்கெட்டுகள் கார்ப்பரேட், ஸ்பான்சர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு செல்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அது மட்டுமல்லாமல், போட்டிக்கான 750 ரூபாய் complementary டிக்கெட் 4 ஆயிரம் ரூபாய்க்கும், 1,500 ரூபாய் டிக்கெட், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக ரசிகர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்