- நெல்லை மாநகர் பகுதிகளில் 12க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- நெல்லை மாநகர் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றதால், 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- தொழில்நுட்ப உதவிகளோடு இரவு பகலாக தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, தூத்துக்குடியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
- நெல்லை சட்டமன்றத் தொகுதி விசிக துணை செயலாளராகவும் உள்ள அவர், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதும் அம்பலமானது.
- திருடப்பட்ட நகைகளை, கரிசல்குளத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் விற்றது தெரிய வந்தது.
- இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஜெயக்குமாரிடம் இருந்து 49 பவுன் நகைகள் மற்றும் 27 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ஜெயக்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 12 வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.