NIA அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை - பாஜக நிர்வாகி கைவரிசை - சென்னையில் பரபரப்பு | thanthi tv

Update: 2022-12-22 05:18 GMT

சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் என கூறி பணம் கொள்ளையடித்த வழக்கில் 6 பேரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் ஜமால் என்பவரின் வீடு மற்றும் செல்போன் கடைக்கு வந்த கும்பல், தங்களை என்ஐஏ அதிகாரிகள் என கூறி 20 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. விசாரணையில் அது போலி என்ஐஏ அதிகாரிகள் என தெரியவந்த நிலையில் பாஜக நிர்வாகியான வேங்கை அமரன் உள்ளிட்ட 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அப்போது 2 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாகவும், அதனை குகை ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறினர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 6 பேரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதனிடையே இந்த கொள்ளையில் தொடர்புடைய முகமது பாசில் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஜிம் பயிற்சியாளராக உள்ள அவர் வசமிருந்த ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்