மணிப்பூரில் மீண்டும் வெடித்தது கலவரம்.. விரையும் ராணுவம்.. நாடே பரபரப்பில்..
மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் மணிப்பூருக்கு விரைந்துள்ளனர்.
மாநிலத் தலைநகர் இம்பாலின் நியூ செக்கன் பகுதியில் உள்ளூர் சந்தையில் இடம் தொடர்பாக மெய்டேய் மற்றும் குக்கி சமூகங்கள் மோதிக்கொண்டன. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் தீ வைப்புச் சம்பவங்களும் நடந்தன.இதையடுத்து அந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு மாலை 4 மணிக்கு பின் தளர்த்தப்பட்டது. மீண்டும் அங்கு வன்முறை வெடித்ததை அடுத்து,இயல்பு நிலையை கொண்டு வர, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் மணிப்பூருக்கு விரைந்தனர்.