ரோமில் நடந்த LGBT சமூகத்தினருக்கான அணிவகுப்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்... இத்தாலியின் வலதுசாரி பிரதமரான ஜியோர்ஜியா மெலோனி 7 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அந்நாட்டில் LGBT சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், ரோமில் நடந்த இந்த வருடாந்திர அணிவகுப்பில் LGBT சமூகத்தினரும், அதன் ஆதரவாளர்களும் பேரணி நடத்தி உரிமைகளை வலியுறுத்தினர்.