நாடு முழுவதும் 73 வது குடியரசு தின விழா வருகின்ற 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்,சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது .
முப்படை ,தேசிய மாணவர் படை ,மத்திய தொழில் பாதுகாப்புப் படை ,காவல் துறை ,தீயணைப்புத்துறையினர் அணிவகுப்பும் ஒத்திகையில் பங்கேற்றுள்ளன .
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடியரசு தின விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தமிழக அரசின் 20 துறைகளைச் சார்ந்த அலங்கார ஊர்திகள் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் இடம்பெறுகிறது.
குடியரசு தின விழா ஒத்திக்கை 20,22,24 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
வழக்கமாகக் குடியரசு தின விழா காந்தி சிலை அருகே நடைபெற்று வந்த நிலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது.