தம்பி செய்த தப்பு.. அண்ணனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல் - பகீர் காட்சிகள்
போதை பொருள் விற்பனையில் பல கோடி மோசடி செய்த நபரிடமிருந்து தனது பணத்தை வாங்குவதற்காக அவரது அண்ணனை கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்றத்தூர் அடுத்த கோவூர், ராயல் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரமாக தேடி வந்த நிலையில், சுரேஷ்குமாரை சேலத்தில் மீட்டனர்,. இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் சுரேஷ்குமாரின் சகோதரர் தம்பிலா பண மோசடியில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக அவரது அண்ணனை கடத்தியதும் தெரியவந்தது.