பிரசவத்துக்கு தேவைப்பட்ட அரிய வகை ரத்தம் - ரத்தம் கொடுத்த ரத்தத்தின் ரத்தங்கள்...
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் போதிய அளவில் ரத்தம் இருப்பு இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை அறிந்த விஜய் ரசிகர்கள், ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளன்று செய்யவிருந்த ரத்த தானத்தை தற்போது செய்து விட்டனர்.அரசு மருத்துவமனையில் காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ஒரு பெண்ணின் பிரசவத்துக்கு தேவைப்பட்ட அரியவகை ரத்தமும் கிடைத்ததில், மருத்துவர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் ரத்த தானம் செய்தவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.