அரிய வகை நோய்..மருந்தின் விலை ரூ.18 கோடி-தம்பியை காப்பாற்ற நிதி திரட்டிய அக்கா அதே நோயால் உயிரிழப்பு

Update: 2022-08-02 08:39 GMT

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரபீக் - மரியம் தம்பதிக்கு அஃப்ரா என்ற மகளும், அனியன் முஹம்மது என்ற மகளும் இருந்தனர். இருவருமே முதுகெலும்பு தசைக் குறைபாடு எனப்படும் மரபணு கோளாரால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அரிய நோய்க்கு சிகிச்சையளிக்க ஒரு டோஸ் சோல்ஜென்ஸ்மா மருந்தின் விலை 18 கோடியாகும். எனவே, தமது ஒன்றரை வயது தம்பிக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அஃபரா, நன்கொடை அளிக்குமாறு ஊடகங்கள் மூலம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, உலகம் முழுவதிலிருந்தும் முஹம்மது சிகிச்சைக்காக 46.78 கோடி ரூபாய் நன்கொடையாக குவிந்தது. இதன் மூலம் அஃப்ராவின் தம்பிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமாகி வருகிறான்.

இதே நோயால் பாதிக்கப்பட்டுள்ள அஃப்ரா, சில நாட்களாக கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமானதால் கோழிக்கோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்