காய்ந்த துணியை எடுக்க சென்ற போது பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம் | Ranipet | Electric Shock
ராணிப்பேட்டையில் காய வைத்திருந்த துணியை எடுக்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவி, மின்சாரம் தாக்கியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சோளிங்கர் அருகில் கிராமத்தை சேர்ந்தவர் நிவேதா. இவர் அருகில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் வீட்டில் காய வைத்திருந்த துணிகளை ஈரமான குச்சியை கொண்டு எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது குச்சி மின்சார வயர் மீது உரசியதில், மின்சாரம் தாக்கி மாணவி நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் மானவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவி ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்ட செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.