ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை... தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி

Update: 2023-05-16 11:05 GMT

கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை தொடங்கப்பட்டது. யாத்திரையை காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தொடங்கி வைத்தார். வாகனத்தில் ஜோதியை ஏந்தி புறப்பட்ட போது, காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் நடந்து சென்றனர். அப்போது, வாகன பயணத்திற்கு மட்டும் அனுமதி பெற்றுள்ள நிலையில், அனுமதியின்றி நடைபயணம் மேற்கொண்டதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வாகனம் புறப்பட்டு சென்றது. இந்த யாத்திரை வரும் 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நிறைவடைய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்