"நவ.6ஆம் தேதி வரை மழை நீடிக்கும்" - வானிலை மையம் எச்சரிக்கை
புழல் ஏரிக்கு 2000கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து பிற்பகல் 3மணியளவில் 100கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது. வெளியேற்றப்படும் உபரிநீர், நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே செல்ல உள்ளது. இதனால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தி உள்ளார்.