காலாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு அதிர்ச்சி - தேங்கி நிற்கும் மழைநீர்
சிவகங்கையில் பள்ளிகளுக்குள் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளி திரும்பிய மாணவ, மாணவியர்கள் அவதி அடைந்தனர்.
சிவகங்கையில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு பள்ளிகளில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரங்களும் வேருடன் சாய்ந்துள்ள நிலையில், தேங்கியுள்ள மழைநீரை அகற்றுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்