"அந்நிய மண்ணில் இந்தியாவை அவதூறு செய்ய ஒப்பந்தம் எடுத்துள்ள ராகுல்" - மத்திய அமைச்சர் கடும் சாடல்
அந்நிய மண்ணில் இந்தியாவை அவதூறு செய்ய ராகுல் காந்தி ஒப்பந்தம் எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்...ஒரு வார பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடி வருகிறார். கடந்த வாரம் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக கருத்து தெரிவித்தார். நேற்று முன்தினம் லண்டனில் உள்ள இந்திய செய்தியாளர்கள் அமைப்பினருடன் கலந்துரையாடிய அவர், இந்தியா மவுனமாக இருக்க வேண்டும் என மோடி விரும்புவதாகவும், நாடு முழுவதும் குரல்கள் நெறிக்கப்படுவதாகவும் விமர்சனம் செய்தார். அரசுக்கு எதிராக பேசுவதை பிபிசி நிறுத்தினால் வழக்குகள் அனைத்தும் காணாமல் போகி அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், தன்னுடைய தோல்விகளை மறைக்க அந்நிய மண்ணில் இந்தியாவை அவதூறு செய்ய ராகுல் காந்தி ஒப்பந்தம் எடுத்திருப்பதாகவும் அவரது மொழி சிந்தனை, பணியாற்றும் பாணி அனைத்தும் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சுமத்தியுள்ளார்... இத்தகைய செயல்களை ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் செய்து வருவதாக அனுராக் தாக்கூர் சாடியுள்ளார்.