ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'சந்திரமுகி இரண்டாம் பாகம்
விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோரை வைத்து பி.வாசு இயக்குகிறார். படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கும் நிலையில், படம் செப்டம்பர் 29ஆம் தேதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.