அதிரவைக்கும் புதினின் புதிய சூளுரை

Update: 2022-11-05 14:56 GMT

உக்ரைனில் நவீன நாசி அதிகாரத்துடனான மோதல் தவிர்க்க முடியாதது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரியில் சிறப்பு ராணுவ நடவடிக்கையைத் தொடங்காமல் இருந்திருந்தால் ரஷ்யாவுக்கு மோசமானதாக இருந்திருக்கும் என்று புதின் படையெடுப்பை நியாயப்படுத்தினார்.

கடந்த தசாப்தத்தில் மேற்கத்திய நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உக்ரைனிய விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிய புதின், லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் மனதில் போலி மதிப்புகளை விதைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை பலவீனப்படுத்தி அழிக்கும் முயற்சிகள் தொடர்வதாக குற்றம் சாட்டிய புதின், அதை ஒருபோதும் நடக்க அனுமதிக்க மாட்டூம் என்றும், மூதாதையர்களைப் போலவே தாய்நாட்டைப் பாதுகாப்போம் எனவும் புதின் சூளுரைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்