சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த 'பி.எஸ்.எல்.வி -சி55'

Update: 2023-04-23 03:18 GMT

விண்வெளி துறையில் அளப்பரிய சாதனைகளை செய்துவரும் இஸ்ரோ, வர்த்தக நோக்கில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணிற்கு ஏவி வருகிறது. சிங்கப்பூர் நாட்டின் பூமியை கண்காணிக்கும் டெலியோஸ்-2 செயற்கைக்கோள், லூமிலைட்-4 தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருதது. அதன்படி பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து மதியம் 2.19 மணிக்கு சீறி பாய்ந்த ராக்கெட் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டத்தை வெற்றிகரமாக்கிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்